வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் ஊடாக வேண்டியோருக்கு பணம் அனுப்பலாம்
தனி நபருக்கு அல்லது குழுமத்திற்கு அனுப்பிய செய்திகள் மற்றும் ஏனைய பதிவுகள் ஏழு நாட்களின் பின் மறைந்துவிடும். இது எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட புதிய அப்டேட் ஆக வாட்ஸ்அப் அண்மையில் வாட்ஸப் பாவனையாளர்களுக்கு வழங்கியுள்ளது. இதற்கு வாட்ஸ்அப் பாவனையாளர்கள் கூகுள் ப்ளே ஸ்டோர் (google play store) ஊடாக அப்டேட் படுத்துக்கொண்டால் இந்த புதிய அம்சங்களை பயன்படுத்தலாம். வேறு ஒருவர் அனுப்பிய செய்திகளை அனுப்பினாலும் மறைந்துவிடும்.
வங்கியில் ஒருவருக்கு பணத்தை அனுப்புவது போன்று வாட்ஸ்அப் இன் ஊடாகவும் இன்று பணம் அனுப்பலாம். ஆனால் இது இந்தியாவிற்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ள அல்லது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு அம்சமாகும். இந்தியாவில் இதற்கென ஏராளமான மென்பொருட்கள் காணப்படுகின்றது அதில் ஒன்றாக வாட்ஸ்அப் இணைந்துள்ளது.
அடுத்த புதிய அப்டேட் ஆக வாட்ஸ் அப்பில் ஸ்மார்ட்போனில் காணப்படுவது போன்று ஒரு நினைவகம் காணப்படுகின்றது. இதனூடாக அனுப்பிய பதிவுகள் படங்கள் மற்றும் பிறரால் அனுப்பப்பட்ட பதிவுகள் பார்த்துக்கொள்ள முடியும்.
தொந்தரவுகளை தவிர்த்துக் கொள்வதற்காக தாற்காலிக Mute சேவைக்கு பதிலாக நிரந்திரமாக மூட் செய்யலாம்.
எதிர்காலத்தில் வாட்ஸ்அப் இல் வரக்கூடிய அப்டேட்கள் ஆக Multiple Device இல் ஒரு வாட்ஸப் இலக்கத்தின் ஊடாக பயன்படுத்த முடியும் மற்றும் system update ஆக வரக்கூடும்.
கருத்துகள்
கருத்துரையிடுக