அரசியலின் அறிமுகம், அரசியலாய்வு மற்றும் அணுமுறைகள்
அரசியலை விளங்கிக்கொள்ளல்
ஏனையோறுடன் சேரந்து சமூதாயமாக வாழத் தொடங்கியதுடனே அவனோடு அரசியலும் பிறந்து விட்டது.
இதன் விளைவாக அரசியலும் மனித வாழ்வின் ஒரு பிரதான அங்கமாக மாறிவிட்டது
அனைத்து மனிதர்களும் ஏதாவதொரு அரசினுல் பிறக்கின்றனர். அதனால் ஒவ்வொரு மனிதன் ஏதாவதொரு வழிமுறையில் அரசுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புபட்டு வாழ்கின்றனர்.
வேறுவகையில் கூறின் மனிதன் விரும்பியோ விரும்பாமலோ அரசினுல் தொடர்ப்புட்டவனாக திகழ்வதுடன், அந்நிலை அன்னியோன்னிய மற்றும் விடுவிக்க முடியாத ஒரு தொடர்பினை வைத்துவிடுகின்றான். இதனாலயே அரிஸ்டோட்டில் பின்வருமாறு கூறினார்
“மனிதன் பிறப்பிலே அரசியல் விலங்காவான்."
இந்த தொடர்பின் இயல்பினை எல்லா பிரசைகளும் அறிந்திருத்தல் அவசியமாகும். அந்தவகையில் அரசறிவியலை கற்கும் மாணவர்களும் இதனை கற்பது அவசியமாகும்.
எல்லா மக்களின் சமூக வாழ்க்கையில் தொடர்புபடும் பிரதான அங்கமாக திகழும் அரசியலை கற்பதே அரசறிவியல் என எளிமையாக கூறலாம்.
அரசியலை பயிலும் அரசறிவியலானது மிக நீண்ட வரலாற்றினைக் கொண்டதாகும். இது சுமார் 2500 ஆண்டுகளாக (25 நுற்றாண்டுகள்)) வளர்ச்சியடைந்து மாற்றமுற்று வரும் ஒரு கற்கை துறையாகும். சமூக விஞ்ஞான கற்கையின் ஒரு பிரதான கற்கைத்துறையாகும். கி.மு 4 ஆம் நுற்றாண்டில் கிரேக்கத்தின் எதென்ஸ் நகரில் அறிமுகமாகி, அரசியலை கற்றல், கற்பித்தல், அபிவிருத்தி செய்தல் மற்றும் பயிற்சியளித்தல் போன்றன அரிஸ்டோட்டிலின் லைசியம் மற்றும் பிளேட்டோவின் அகடமி ஆகிய கல்விக்கூடங்களில் கற்கப்படட்ன.
அரிஸ்டோட்டில் மற்றும் பிளேட்டோ ஆகியோர் ஆரம்பகால அரசியல் தத்துவஞானிகளாவதுடன், அரசியல் என்ற சொல்லுக்கு சொந்தக்காரராக அரிஸ்டோட்டில் விளங்குவதுடன் அவரே அரசியலின்/அரசறிவியலின் தந்தை என்றும் கூறப்படுகின்றார்.
அரசியல் பற்றி எல்லோராலும் ஏற்றுக்கொளள்ப்பட்ட ஒரு கருத்து நிழவுவதில்லை என்றாலும் அக்கால கல்விக்கூடங்களில் பின்வருவன பற்றி ஆய்வுகளும் கற்பிக்கவும் செய்தனர்.
அரசியல் மற்றும் அதனோடு தொடபுடைய துறைகளை பற்றி கற்றல், ஆய்வு செய்தல், விபரித்தல், ஆரம்பகால கோட்பாடுள் மற்றும் எண்ணக்கருக்களை விமர்சனம் செய்தல், இதனுடாக புதிய கோட்பாடுகளையும், எண்ணக்கருக்களையும் கட்டியெழுப்பல், நடைமுறை அரசியல் முறைகள் மற்றும் கொள்கை முறைகள் பற்றிய விமர்சனம், அதனூடாக புதிய பிரேரணைகள் உருவாக்கல், பிரசைகளுக்கு அரசியல் அறிவினை ஊட்டல் முதலானவை இதில் அடங்குகின்றன. இவற்றினையே இன்று பாடசாலைகளிலும், பல்கலைக்கழகங்களிலும் போதிக்கப்படுகின்றன.
அரசறிவியல் என்றால் என்ன என்பதை விளங்கிக் கொள்வதில் பிரதான சில விடயங்கள் காணப்படுகின்றன.
அரசறிவியல் ஓர் புராதன கற்கையாகும். மெய்யியல், கணிதம், தர்க்கவியல், ஒழுக்கவியல், அழகியல் போன்ற துறைகளுக்கு இணையாக அரசறிவியலின் பரவல் கி.மு. நான்காம் நூற்றாண்டு அளவில் புராதன கிரேக்கத்தில் ஆரம்பமானது.
ஓர் கற்கைத் துறையாக அரசறிவியலின் இயல்பு பாடப்பரப்பு, உள்ளடக்கம், விதிமுறைகள், கோட்பாடுகளும் எண்ணக்கருக்கள் போன்ற இவை பல்வேறு விருத்திகளினால் சுமார் 25 நூற்றாண்டுகளாக கட்டியெழுப்பப்பட்டு, மாற்றமடைந்து மற்றும் அபிவிருத்தி அடைந்து வந்ததாகும்.
அரசறிவியல் அணுகுமுறைகள், கோட்பாடுகள், விதிமுறைகள் என்பன தொடர்பில் பன்மைத்துவமே காணப்படுகின்றது. அவை பல்வேறு குருகுலக் கல்வி நிலையங்கள், சம்பிரதாயங்களுடன் காணப்படுகின்றது. இப்பன்மைத்துவமே அரசறிவியலை கற்பதில் உளள் ஒரு சிறப்பாகும்.
அரசியல் விஞ்ஞானக் கற்கையை பல்வேறு கல்வியலாளர்களினாலும், தத்துவஞானிகளாலும் பல்வேறு வடிவில் அழைக்கப்படுகின்றன.
உ ம் - அரிஸ்டோடில் பேராசிரியர் லஸ்கி - அரசியல் என்றும், வில்லியம் கொட்வின், பிரைஸ் பிரபு - அரசியல் விஞ்ஞானம், என்றும் ச ப கெட்டல் - அரச விஞ்ஞானம் என்றும் அழைத்தனர்.
அரசியலின் கற்கைத்துறை இரு பிரதான வடிவில் இன்று பல்கழைக்கழகங்களில் மற்றும் பாடசாலைகளில் போதிக்கப்படடு; வருகின்றன.
அரசியலின் வரைவிலக்கணம்
அரசியல் என்றால் என்ன என்பதற்கு பொதுவாக கிடைக்கும் இலகுவான பதில் “தேசத்தை ஆட்சி செய்தல்” என்பதாகும். இது அரசியல் என்ற எண்ணக்கரு தொடர்பில் காணப்படும் பிரசித்தமான அல்லது பயன்பாட்டில் உள்ள புரிதலாகும். இது அரசியல் தொடர்பில் காணப்படும் முழுமையான வரைவிலக்கணம் அல்ல. இது அரசியல் எண்ணக்கரு தொடர்பில் வாய்மொழியாக கட்டியெழுப்பப்பட்ட ஒன்றாகும்.
அரசியலின் இரு கருத்தியல்கள்
1. அரசு, அரச நிர்வாகம் மற்றும் அரசாட்சி பற்றிய அடிப்படை எண்ணக்கரு.
2. அரசுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் அரசுக்கு வெளியே பிரசைகள் பங்குபெறும் சமூக பயன்பாடு.
அரசு, அரச நிர்வாகம் மற்றும் அரசாட்சி பற்றிய அடிப்படை எண்ணக்கரு
அரசியல் தொடர்பில் காணப்படும் புராதன மற்றும் மையமான வரைவிலக்கணங்களாகும்.
அரசியல் தொடர்பில் புராதன கிரேக்கத்திலும், இந்தியா மற்றும் சீன தத்துவவியலாளர்களும் அரசு மற்றும் அரச அதிகாரத்தை பயன்படுத்துவதோடு தொடர்புபடுத்தியே வரைவிலக்கணப்படுத்தியுள்ளனர்.
ஆங்கில மொழியில் (Politics) என்பது கிரேக்க மொழியில் (Politikos - பொலிடிகோஸ் ) என்ற பதத்திலிருந்து பிரிந்து வந்ததாகும். “பொலிஸ்” (Polis) என்பது நகர அரசாகும்.
அதாவது, சிறிய நகரத்தை மையப்படுத்திய அரசாகும். “நகர அரசு” என்பதே Politikos என்பதன் விளக்கமாகும். இதன்மூலம் அரசறிவியல் என்பது நகர அரசு தொடர்பான விடயத்தினை ஆராயும் விஞ்ஞானம்/கலையாகவே கருதப்பட்டது.
நகர அரசு தொடர்பான விடயப்பரப்பிற்குள் பரந்த கருத்தியல்கள் பல காணப்படுகின்றன. அரசின் தோற்றம், அரசின் நோக்கம், அரச ஆட்சி முறைகள், அரசு மற்றும் பிரசைகளுக்கிடையிலான தொடர்புகள், ஆட்சியாளர்களின் குணாம்சங்கள் மற்றும் திறன்கள், அரசாட்சி செயன்முறைகள் என்பன இவற்றில் முக்கியமான கருத்தியல்களாகும்.
புராதன இந்தியா மற்றும் சீனாவில் “அரசியல்” என்பது இவ்வர்த்தத்திலேயே பார்க்கப்பட்டது. கௌடிலியர் மற்றும் கொன்புசியஸ் போன்ற சிந்தனையாளர்களின் நூல்களில் காணப்படுகின்றன.
இவ்விரு சிந்தனையாளர்கள் மட்டுமன்றி அரிஸ்டோட்டிலும் கூட ஆட்சியாளர்களுக்கு அரசாட்சி தொடர்பாக ஆலோசனை வழங்குவதே அரசியல் வல்லுனர்களின் கருமமொன்றாக இருந்தது என கூறப்பட்டது.
அரசியல் சமூக பயன்பாடொன்றாக:
அரசியல் என்பது அரசு, அரசாங்கம் மற்றும் அரச நிருவாகம் போன்ற துறைகளுக்கு மட்டுப்படுத்தாமல் அதற்கு வெளியில் சமூக பிரசைகளுக்கிடையில் காணப்படும் நடைமுறை என்பதே இதன் பொருளாகும். இங்கு தெரிவுப்பணி மற்றும் அதிகாரப்பணி என்ற இரு பணிகள் பிரசைகளால் செய்யப்படுகின்றமை முக்கியமானதாகும்.
உதாரணம் - பிரசைகள் ஆட்சியாளர்களை நியமிக்கின்றனர். அவர்களுக்கு அரசாளுவதற்கான அதிகாரத்தை வழங்கியுள்ளனர். அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களாகவும் உள்ளனர். இவைத் தவிர கூட்டங்கள், ஊர்வலங்கள், எதிர்ப்பு நடவடிக்கைகள், வேலைநிறுத்தங்கள், போராட்டங்கள் மற்றும் சுயாதீன சங்கங்கள் மூலம் பொதுத் தேவைகளை நிறைவேற்றுதல் போன்ற ஊடகங்கள் மூலம் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
இதன்படி ஆட்சியாளர்கள் மற்றும் தொழிலாக அரசியலை செய்யும் அரசியல்வாதிகள் மட்டுமின்றி பிரசைகளும் அரசியல் செய்கின்றனர். இது கிரேக்க யுகம்வரை நீண்டுள்ளது. “அரசியல்” என்பது புராதன நகர அரசோடு தொடர்புடையது என்ற கிரேக்க கருத்தில் இரு அர்த்தங்கள் உள்ளன. அவையாவன,
1. அரசு மற்றும் அரசாட்சியோடு தொடர்புடைய விடயம்
2. அரச செயற்பாடுகள் தொடர்பில் பிரசைகளின் கடமைளும் பொறுப்புக்களினது செயற்பாட்டுத்தன்மை என்பனவாகும்.
உதாரணம் : கிரேக்கத்தில் அப்போது காணப்ப்பட்ட நேரடி ஜனநாயக ஆட்சி முறையில் பிரசைகளின் நேரடி பங்குப்பற்றல் காணப்பட்டது. சட்டவாக்கம், நகர நிருவாகம் மற்றும் நீதிதது;றைகள் போன்ற செயற்பாடுகளில் பிரசைகள் சுயாதனீமாக ஈடுபட்டனர். “செயற்பாட்டு பிரசை” எனும் எண்ணக்கரு அரிஸ்டோட்டிலின் அரசியல் (Politics) நூலில் இவ்வர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி பிரசைகளின் அரசியல் பங்குப்பற்றல் என்பதற்கு “அரசியல்” என்ற எண்ணக்கருவில் விசேட இடம் கிடைத்துள்ளது. பிரசைகளின் செயற்பாடுகள் மற்றும் பங்குப்பற்றல் இல்லாத அரசியலொன்றை எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு இவ்விடயம் வேரூன்றியுள்ளது.
பாராட்டுக்குரிய பயனுள்ள முயற்சி. குறிப்பாக மாணவர்களுக்குப் பெரிதும் உதவும். முதலில் நோட்பேட்டில் தட்டச்சு செய்து, தமிழ் மொழிப் பிழைகளைச் சரிசெய்து, செம்மைப் படுத்தியபின் வலைப்பூவில் பதிவுசெய்தால் நல்லதென நினைக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள் !
பதிலளிநீக்கு