கல்வி ரீதியான தகவல்கள், விளையாட்டு, தகவல் தொழில்நுட்பம், விஞ்ஞான தகவல்கள், பொது அறிவுத் தகவல்கள், அரசாங்க தொழில் வாய்ப்புகள் மற்றும் செய்திகள் இங்கு பதிவிடப்படும்.
இடவிளக்கப்படங்களில் பௌதிக பண்பாட்டமச்ங்கள்
இணைப்பைப் பெறுக
Facebook
X
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
அறிமுகம் :
குறித்ததொரு இடத்தின் பௌதிக மற்றும் மானிட நிலத்தோற்றம் தொடர்பான தகவல்கள் பலவற்றை படம் ஒன்றில் உள்ளடக்க முடியும். அத்தகவல்களுள்,
⦁அமைவிடம்
⦁தரைத்தோற்றம்
⦁வடிகால்
⦁இயற்கைத் தாவரம்
⦁நீர்ப்பாசனம்
⦁நிலப்பயன்பாடு
⦁வீதி வலைப்பின்னல்
⦁நிர்வாக எல்லைகள்
⦁குடியிருப்பு
ஆகிய பௌதிக மற்றும் மானிட அம்சங்கள் என்பன முக்கியமாகின்றன.
இலங்கை நில அளவைத் திணைக்களம் ஊடாக வழங்கப்பட்டுள்ள 1:50000 இடவிளக்கப் படங்கள் இவ்வாறான அம்சங்கள் பலவற்றை உள்ளடக்கியுள்ள நிலத்தோற்ற படங்களாகும்.
பிற்காலத்தில் 1:10000 அளவுத்திட்டத்தில் நகரப் படங்கள் உருவாக்கப்பட்டன. படம் ஒன்றின் அளவு அதிகமாகும் போது, அதில் உள்ளடங்கக்கூடிய தகவல்களின் அளவும் அதிகமாவது படங்களை அவதானிக்கும் போது தெளிவாகிறது.
படமொன்றினை அமைக்கும் போது அமைவிடம், அளவுத்திட்டம், திசை ஆகிய அடிப்படை அம்சங்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். அதேபோல் படத்தை இலகுவில் வாசிப்பதற்காக குறியீட்டு விளக்கம் ஒன்றும் முன்வைக்கப்பட வேண்டும். படம் ஒன்றில் பல்வேறு தகவல்கள் காட்டப்படுவதுடன் அதற்காக குறியீடுகள், எழுத்துக்கள் மற்றும் நிறங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இலங்கையில் 1:50000 இடவிளக்கப்படத்தின் அறிமுகம்
⦁இலங்கையின் நில அளவைத் திணைக்களம் 1980களில் உருவாக்கப்பட்டது.
⦁இது மெற்றிக் அளவிடுகளைப் பயன்படுத்தி இலங்கை படமொன்றினை தயாரித்தது.
⦁இதன் அளவுத்திட்டம் - 1:50000
⦁சமவுயரக் கோட்டு இடைவெளி 20 மீட்டராக இருந்தது.
⦁நிலப்பரப்பில் 1cm நீளமான தூரத்தினை படத்தில் 2km ஆக காட்டப்பட்டது.
⦁நீளம் :- 432km x 2 = 864cm
⦁அகலம் :- 224cm x 2= 448cm
⦁இலங்கையின் தீவுகள் உற்பட மொத்த நிலப்பரப்பு – 65625km சதுர பரப்பாகும்.
⦁இலங்கையின் இடவிளக்கவியல் 92 பிரிவுகளாக பிரிக்கபப்ட்ட படத்தாள்களாக (Sheets) வகைப்படுத்தப்பட்டுள்ளன.
படத்தாள் இல.
57 மற்றும் 58
64 மற்றும் 65
71 மற்றும் 72
ஆகுமாறு இரு பிரதேசங்கள் இணைக்கப்பட்டு ஒரு படத்தாளாக அச்சிடப்பட்டுள்ளமையினால் அச்சிடப்பட்ட படத்தாள்கள் 89 மட்டுமாகும்.
இத்தகைய 92 படத்தாள்களில் உள்ளடக்கப்படும் ஒரு பாடத்தாளின் நிலப்பகுதி,
நீளம் - 40 KM
அகலம் - 25 KM
படத்தாளின் பிரதேச உண்மை நிலப்பரப்பு (பரப்பளவு) – 40x25 = 1000 சதூர கிலோமீற்றர்.
1:50000 அளவுத்திட்டத்திற்கு ஏற்ப படமாக்கப்பட்ட பகுதியின் விஸ்தீரனம்
நீளம் - 40km x 2 = 80cm
அகலம் - 25km x 2 = 50cm
வரையப்பட்ட படத்தின் பரப்பளவு – 80cm x 50cm – 4000சதுர CM ஆகும்.
1: 50000 இடவிளக்கப்படம்
1)படத்தின் முகப்பிலுள்ள தகவல்கள்
2)புற எல்லைத் தகவல்கள்
1)படத்தின் முகப்பிலுள்ள தகவல்கள்
I)பௌதீக அம்சங்கள்
நிலவுருவங்கள்
ஆறுகள்
காடுகள்
புல் நிலங்கள்
பற்றைக் காடு
பாறை வெளியரும்பு
II)பண்பாட்டு அம்சங்கள்
நிர்வாக எல்லை
வீதிகள்
குடியிருப்புகள்
பயிரிடப்பட்ட நிலங்கள்
அரசாங்கக் கட்டிடங்கள்
2)புற எல்லைத் தகவல்கள்
I)வெளி எல்லையின மேல் ஓரம்
A. படத்தின் வகை
B. படத்தின் பெயர்
C. படத்தின் இலக்கம்
II)வெளி எல்லையின் கீழ் ஓரம்
அளவுத்திட்டம்
திசை
குறியீட்டு விளக்கம்
நிர்வாக எல்லைகளைக் காட்டும் வரைப்படம்
அருகிலுள்ள படங்களைக் காட்டும் வரைப்படம்
இடவிளக்கப்படத்தின் முக்கிய அம்சங்கள்
01. அமைவிடம்
அமைவிடம் என்பது ஒவ்வொரு பிரதேசமும் சுட்டி நிற்கும் எல்லைப் பரப்பாகும். ஓவ்வொரு பிரதேசத்திற்கும் அகல, நெடுங்கோட்டு அம்சங்களைக் கொண்டு காணப்படுகிறது. உலகில் ஒவ்வொரு பிரதேசமும் இவ்வாறான அகல நெடுங்கோட்டிற்கு இடைப்பட்ட அமைவிடத்தைக் கொண்டு காணப்படுகிறது.
1 சார்பு அமைவிடம்
ஓரிடத்தின் அமைவிடத்தை வேறொரு அம்சத்துடன் தொடர்பு படுத்திக் குறிப்பிடுதல்
உ-ம் : நிர்வாக எல்லை அடிப்படையில் அடுத்துள்ள படங்களைக் குறிப்பிடுதல்
2 தனி அமைவிடம் அகலக்கோடு, நெடுங்கோடு அடிப்படையில் (ஆட்கூறு) குறிப்பிடல்.
3 மெற்றிக் அமைவிடம ; ஒரு பிரதேசமானது எத்தனை நீள, அகலங்களைக் கொண்டுள்ளது என்பதைக் குறிக்கின்றது.
02. திசை
தேசப்படங்களில் திசைகளைக் குறித்தல் ஒரு எளிதான செயல் அல்ல. தேசப்படங்களிலிருந்து திசைகளைத் தீர்மானித்தல் முன்னேற்பாடுகளுடன் செய்ய வேண்டும். புவிப்படவியலில் திசையமைவு செய்தல் முக்கியமான ஒன்றாகும்.சமபரப்பான தாள்களில் வரையப்பட்டிருக்கும் பரப்பிற்கு மேல், கீழ் என்று நிர்ணயிக்க முடியாது. பார்பவர் எதனை மேல் வைத்து பார்க்கிறாரோ அதுவே மேல்பகுதி ஆகும். இடைக்காலத்தில் ஐரோப்பாவில் முக்கிய பகுதிகளை மேற்பகுதியிலோ அல்லது மையத்திலோ வைத்து புவிப்படங்களை வரைந்து வைத்தனர். கிறிஸ்த்தவ மதத்தின் சொர்கக்ம் அல்லது கிழக்கு மேற்பகுதியிலும் ஜெரூஸலம் புவிப்படத்தின் மையத்திலும் வரையப்பட்டு வந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு தான் திசையமைவு என்ற சொல் பழக்கத்தில் கொண்டுவரப்பட்டது.நாட்கள் செல்ல செல்ல வடக்கினை புவிப்படங்களில் மேல் வைத்து வரைதல் பழக்கப்படுத்தப்பட்டு விட்டதால் அதனையே பின்பற்றப்படுகின்றது. வட அமெரிக்காவில் மேல் பகுதி மிக்சிக்கனவாகவும் கீழ்ப்பகுதி கலிபோனியா என்றும் சாதாரணமாகப் புரிந்து கொள்ளும் படி அமைக்கப்பட்டு இருந்தது. திசையமைவு செய்வதில் மேல் பகுதி வடக்காக வைத்து வரைதல் புவிப்படவியலில் முக்கியமான ஒன்றாகும்.
2.1 திசையைக் குறித்துக் காட்டுதல்
படத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களை விளங்கிக ;கொள்வதற்குத் திசை மிகவும் உதவியாக இருக்கும். பொதுவாக ஒரு படத்தின் வடக்காக அம்புக்குறி ஒன்றினால் இது குறித்தக்காட்டப்படும். அதற்கிணங்க ஏனைய பிரதான திசைகளையும், உப திசைகளையும் அடையாளம் செய்ய முடியும்.
அளியடைப்பு வடக்கு – படத்தின் அடிப்படை அளியடைப்பு வடக்கு உண்மை வடககு் – வடதுருவ திசை காந்த வடக்கு – திசைகாட்டி காட்டும் வடககு்
03. குறியீடுகள் தேசப்படம் முழுவதும் புள்ளிகளாலும், கோடுகளாலும், நிழற் பார்களாலும், பல வர்ணங்களாலும் ஆன குறியீடு எனலாம். தேசப்படம் பல குறியீடுகளால் ஆன ஒரு மொத்தக் குறியீடு ஆகும். குறியீடுகள் வார்த்தைப் போலவே பொருள் பொதிந்தவை. குறியீட்டு நிலங்கள், நீர்ப்பகுதிகள், மலைப்பகுதிகள், மலைப் பகுதிகள், நகரங்கள், போக்கு வரத்து அமைப்புகள் போன்றவற்றின் பொருளை விளக்ககின்றன. உலகில் காணப்படும் ஒவ்வொரு அமைப்பகளையும் அவ்வாறே காண்பிகக் முடியாது. ஆகையால் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. குறியீடுகளின் அமைப்பினால் தான் தேசப்படங்கள் செய்மதிப் படங்களில் இருந்து வேறுபடுகின்றன. வார்த்தைகள் பொருளை விளக்குவது போல குறியீடுகள் பொருளை விளக்ககின்றன. பல வார்த்தைகள் சேர்ந்து ஒரு தொடரினை ஏற்படுத்தவது போலவே ஒழுங்காக குறியீடுகள் அமைந்த தேசப்படம் பொருளை விளக்குகின்றது.
04. அளவுத்திட்டம் (Scale)
ஒரு பிரதேசத்தில் உண்மையான நிலப்பரப்பில் குறித்த இரு புள்ளிகளுக்கிடையிலான தூரத்திற்கும் அப்பிரதேசத்தைக் காட்டும் ஒரு படத்தில் (Map) குறித்த அதே புள்ளிகளுக்கிடையிலான தூரத்திற்கும் உளள் விகிதாசாரத் தொடர்பே அளவுத்திட்டம் எனப்படும்.
4.1 அளவுத்திட்டத்தின் முக்கியத்துவம்
ஒரு பிரதேசத்தின் படத்தினை அமைக்கும் போது அங்கு அளவுத் திட்டம் இன்றியமையாததாகக் காணப்படுகின்றது.
படங்களைப் பயன்படுத்தவோருக்கும் படங்களை உருவாக்குவோருக்கும் அளவுத்திட்டங்கள் மிகவும் பயன்படுகின்றன.
புவியியல் மற்றும் புவிச்சரிதவியல் ஆய்வுகளில் ஈடுபடுவோருக்கும் அளவுத்திட்டங்கள் மிகவும் பயன்படுகின்றன.
அளவுத்திட்டங்களில் உள்ளடங்கும் விடயங்களுக்கு ஏற்ப அதன் பயன்பாடுகளும் அதிகரிக்கக் கூடிய வாய்புள்ளது.
அளவுத்திட்டங்கள் பல்வேறு அளவுகளில் உபயோகிக்கப்படுகின்றது.
1:63000 (1 அங்குலம் = 1 மைல்)
1:50000(1km = 2cm)
1:10000 (1km = 10cm)
சிறிய காணிப்படங்களையும் தேவையான படங்களையும் சிறிய அளவுத்திட்டங்களில் அமைக்கும் போது அதிக விபரங்களைத் திருத்தமாகக்காட்டக் கூடியதாக இருக்கின்றது.
தேசப்படங்கள் மிகவும் சிறியளவிலேயே அமைக்கப்டுகின்றன. இப்படங்களில் பொதுவான விபரங்களையே அறிந்துக் கொள்ள முடியும்.
இடவிளக்கப்படங்கள் மற்றும் புவிச்சரிதவியல் படங்கள் போன்றன பெரிய அளவுத்திட்டங்களில் அமைக்கப்படுவதால் ஒப்பீட்டளவில் விபரங்கள் அதிகமாகக் காணப்படும்.
4.2 அளவுத்திட்ட வகைகள்
பொதுவாக அளவுத்திட்டம் மூன்று வகைகளில் காட்டப்படுகின்றது.
1. நேரடியாகவே ஒரு சிறு வாக்கியத்தினால் உணர்த்தப்படுகின்றது.
உதாரணம்: ஒரு அங்குலம் ஒரு மைலைக் குறிக்கின்றது.
2. வகைக் குறிப்பின்னம் மூலம் காட்டப்படுகின்றது.
உதாரணம்: 1/63360
3. நேர்க்கோடு ஒன்றில் அளவுத்திட்டம் காட்டப்படுகின்றது.
4.3 கோட்டு அளவுத்திட்ட வகைப்பாடு
1. சாதாரண அளவுத்திட்டம் / ஓரலகு நேர்கோட்ட அளவுத்திட்டம்
2. ஒப்பீட்டு அளவுத்திட்டம் / இரட்டை நேர்கோட்டு அளவுத்திட்டம்.
3. முக்கோண அளவுத்திட்டம்.
4. வேணியர் அளவுத்திட்டம்.
1:50,000 இடவிளக்கப்படத்தில் அளவுத்திட்டம் இரண்டு வழிகளில் எடுத்தக்காடட்ப்டுகின்றது.
1. நேர்கோட்டு அளவுத்திட்டம்.
2. வகைக் குறிப்பின்ன அளவுத்திட்டம்.
4.4 நேர்கோட்டு அளவுத்திட்டம் கிடையான கோட்டில் அளவுத்திட்டம் அமைக்கப் படும் போது அது நேர்கோட்ட அளவுத்திட்டம் எனப்படும்.
1:50000 அளவுத்திட்டத்தைக் கொண்ட இடவிளக்கப்படங்களில் படத்தில் 1KM ஆனது நிலத்தின் 50000 CMப் (0.5 KM) பிரதிநிதித்தவப்படுத்தும்.
அதேபோல், நிலத்தின் 1KM ஆனது படத்தில் 2 CM ஆக பிரதிநிதித்துவப்படுத்தும்
4.4.1 நேர்கொட்டு அளவுத்திட்டத்தினை அமைக்கும் பொழுது.
10CM நீளமுடையதாகக் கிடையான கோடு ஒன்றினை வரைந்து 2CM (1KM) பகுதிகளாகப் பிரிக்குக.
முதல் 2CM பகுதியைத் தவிர்த்து ஏனையவற்றிற்கு 0,1,2,3,4 என இலக்கமிடுக.
புச்சியத்தில் இருந்து இடது பக்கமாக 1 எனக் குறிக்க.
இப்பகுதியினை 2MM கொண்ட 10 உப பிரிவுகளாகப் பிரிக்குக.
4.5 அளவுத்திட்டத்திகைக் கணித்தல் நேர்கோட்டு அளவையை வரையும் போது சில கணித்தல் முறையைக் கொண்டே வேண்டியுள்ளது. இதனை வரையும் போது படத்தில் வரையப்படும் இரு புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தினையும் நிலத்தின் தூரத்தினையும் வரையறுத்துக்கொள்ள வேண்டும். நிலத்தின் 1KM ஆனது படத்தில் 2CM எனக் குறித்துக் கொள்ளப்படுகிறது.
100CM = 1M
1000M = 1KM
1KM இல் 100000CM கள் காணப்படுகின்றன.
எவ்வாறு 1:50000 அளவுத்திட்டத்தில் 1KM = 2CM ஆக வருகிறது?
அரசியலை விளங்கிக்கொள்ளல் ஏனையோறுடன் சேரந்து சமூதாயமாக வாழத் தொடங்கியதுடனே அவனோடு அரசியலும் பிறந்து விட்டது. இதன் விளைவாக அரசியலும் மனித வாழ்வின் ஒரு பிரதான அங்கமாக மாறிவிட்டது அனைத்து மனிதர்களும் ஏதாவதொரு அரசினுல் பிறக்கின்றனர். அதனால் ஒவ்வொரு மனிதன் ஏதாவதொரு வழிமுறையில் அரசுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புபட்டு வாழ்கின்றனர். வேறுவகையில் கூறின் மனிதன் விரும்பியோ விரும்பாமலோ அரசினுல் தொடர்ப்புட்டவனாக திகழ்வதுடன், அந்நிலை அன்னியோன்னிய மற்றும் விடுவிக்க முடியாத ஒரு தொடர்பினை வைத்துவிடுகின்றான். இதனாலயே அரிஸ்டோட்டில் பின்வருமாறு கூறினார் “மனிதன் பிறப்பிலே அரசியல் விலங்காவான்." இந்த தொடர்பின் இயல்பினை எல்லா பிரசைகளும் அறிந்திருத்தல் அவசியமாகும். அந்தவகையில் அரசறிவியலை கற்கும் மாணவர்களும் இதனை கற்பது அவசியமாகும். எல்லா மக்களின் சமூக வாழ்க்கையில் தொடர்புபடும் பிரதான அங்கமாக திகழும் அரசியலை கற்பதே அரசறிவியல் என எளிமையாக கூறலாம். அரசியலை பயிலும் அரசறிவியலானது மிக நீண்ட வரலாற்றினைக் கொண்டதாகும். இது சுமார் 2500 ஆண்டுகளாக (25 நுற்றாண்டுகள்)) வளர்ச்சியடைந்து மா
Super
பதிலளிநீக்கு