தத்துவார்த்த/ இலட்சியவாத அணுகுமுறை

 

அறிமுகம்

அரசறிவியலானது பரந்த விடயப்பரப்புகளை உள்ளடக்கியுள்ளதால் அதன் ஆய்வு முறைகள் பலவற்றையும் உள்ளடக்கிய கற்றல் துறையாக உள்ளது. அதன் பாடப்பரப்பைப்  போலவே அதன் ஆய்வு முறைகளும் நீண்டகால வரலாற்றைக் கொண்டு வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியில் இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட விருத்தி முக்கியமானதாகும். இருபதாம் நூற்றாண்டிலேயே அரசறிவியல் சுயாதீன அறிவியல் கற்கை ஒன்றாக தன்னை அடையாளப்படுத்தியது. அதேப்போன்று அரசறிவியலில் ஆய்வு முறைகளாக இன்று நாங்கள் கருதுகின்றவைகளில் பெரும்பாலானவை இருபதாம் நூற்றாண்டில் வளர்ச்சி அடைந்தவைகளாகும். இவை சமூகவியல் மற்றும் மானிடவியல் துறைகளில் ஏற்பட்ட விருத்தி மற்றும் பரிமாற்ற உள்ளடக்கத்திலேயேயாகும்.


அரசறிவியல் அணுகுமுறைகள் சில

1.   தத்துவார்த்த/மெய்யியல் அணுகுமுறை

2.   ஒப்பீட்டு அணுகுமுறை

3.   பன்மைத்துவவாத அணுகுமுறை

4.   விஞ்ஞான அணுகுமுறை (நடத்தைவாதம்)

5.   அரசியல் பொருளியல் அணுகுமுறை

6.   சமூகவியல் அணுகுமுறை

7.   பெண்ணியல்வாத அணுகுமுறை


1.4.1. தத்துவார்த்த /இலட்சியவாத அணுகுமுறை (philosophical/Normative Approach)

அரசியலின் உண்மை நிலையை அன்றி கற்பனையில் தோன்றும் அரசியல் நிகழ்வினை ஆய்வுக்குட்படுத்தும் வழிமுறையே தத்துவார்த்த அணுகுமுறையாகும்

  • அரசியல் ஆய்வில் முதலில் பயன்படுத்தப்பட்டதும் நீண்டகால நிலைப்பினைக் கொண்டதுமான அணுகுமுறை இதுவாகும்.
  • பிளேட்டோ மற்றும் அரிஸ்டோட்டில் இதன் முன்னோடிகளாவர்.
  • ஐரோப்பிய அரசியல் சிந்தனையின் பிரதான சக்தியாக இருந்த சிசரோ, சென் ஒகஸ்டின், மக்கியாவல்லி, தோமஸ் ஹொப்ஸ், ஜோன் லொக், இம்மானுவேல் காண்ட,; ஹெகல,; காள்மாக்ஸ் போன்றோர் இந்த அணுகுமுறையினை முன்வைத்தவர்களில் பிரதானமானவர்கள்.
  • இருபதாம் நூற்றாண்டின் சிந்தனையாளர்களில் மகாத்மாகாந்தி, எனா எரேன்டி, ஜோன் ரோல்ஸ், சார்ள்ஸ் டெய்லர் மற்றும் யேகன் ஹபர்மஸ் போன்றோர் முக்கியமானவர்கள்.
  • இந்த சிந்தனையாளர்களின் தத்துவங்களில் பல்வேறு வேறுபாடுகள் காணப்பட்டப்போதும் இவர்களிடையே பொதுவான முக்கிய அம்சங்கள் இரண்டினை கண்டுக்கொள்ள முடியும்.
  • இவர்கள் அரசறிவியலாளர்களாகவன்றி அரசியல் தத்துவவியலாளர்களாக காணப்பட்டமை.
  • இவர்கள் அனைவரும் அரசியலை இலட்சிய (Normative) கோணத்திலேயே பார்த்தமை.
  • தத்துவவியல் அணுகுமுறையின் அடிப்படைப் பண்புகள் மூன்று உள்ளன.


1 உலகம் தொடர்பான அடிப்படைவாத (Fundamental) வினாக்களை வினவுதலும்  அவற்றை விசாரனை செய்தலும்

உதாரணங்கள் :

  •    உலகம் என்பது யாது?
  •   உலக இருப்பு எவ்வாறு இடம்பெறுகிறது?
  •  உலகம் தொடர்பில் அறிவியல் ரீதியாக நோக்க முடியுமா?
  • மனித வாழக்;கை மற்றும் இருப்பிற்கு அர்த்தம் உண்டா?
  • வாழ்க்கை என்பது யாது?

அரசியல் தொடர்பில் தத்துவவியலாளர்கள் விசாரணை செய்யும் அடிப்படை வினாக்களுக்கான உதாரணங்கள்

  •    அரசியல் என்பது யாது?
  •   அரசு என்பது யாது? அது என்ன நோக்கத்திற்காக உள்ளது?
  •   அரசிற்கு மக்கள் ஏன் அடிபணிய வேண்டும்?
  •    அரசு மற்றும் ஏனைய சமூக நிறுவனங்களுக்கிடையில் காணப்படும் தொடர்பு யாது?

போன்ற வினாக்கள் இன்றும் கலந்துரையாடப்படுகின்ற அரசியல் தத்துவவியலாளர்களால் முன்வைக்கப்படும் அடிப்படை வினாக்களாகும்.


2 தத்துவவியலாளர்கள், உலகை விளக்கிக் கொள்வதற்கு நாங்கள் பயன்படுத்தும் எண்ணக்கருக்களின் விளக்கத்தினை தீர்த்துக்கொள்ளவும், உறுதிப்படுத்திக்கொள்ளவும் விசேட ஈடுபாட்டினை காட்டல்.

 உதாரணம் : நீதி, நியாயம், சமத்துவம், சுதந்திரம், உரிமைகள் போன்ற அரசறிவியலின் அடிப்படை எண்ணக்கருக்களின் ஆழமாக தேடுதல்.


3 இலட்சியவாத அணுகுமுறை அரசியலின் இலட்சிய நோக்கங்கள் மீது காட்டும் அதிக ஈடுபாடு.

  •  இலட்சியம் (Normative) என்பதன் விளக்கம் “பெறுமானங்களின் முடிவுகளை” உள்ளடக்கியது என்பதாகும்.
  •  உலகில் ஏற்படும் விடயங்கள் குறித்து எம்மிடம் நல்லவை/தீயவை, சாதகம்/பாதகம் என்ற வகையில் பெறுமானத் தீர்மானங்கள் உண்டு. அவ்வாறானவையே இலட்சிய பெறுமானத் தீர்மானங்களாகும். உதாரணம் :- கடுங் குற்றமிழைத்த ஒருவருக்கு மரண தண்டனையை கட்டாயமாக்க வேண்டுமா? என்பது தொடர்பில் நன்மை/தீமை, சாதகம்/பாதகம் எனும் வகையில் பெறுமானங்கள் தொடர்பாக தீர்ப்பனவுகள் உண்டு.
  • அதேப்போன்று உலக நிகழ்வுகள் தொடர்பாக பண்புரீதியான மதிப்பீடடு; அளவீட்டுக் கருவிகளை எமக்கு வழங்குவதும் இலட்சிய எண்ணக்கருவின் மூலமாகும். 

          உதாரணம் :- சுதந்திரம், சமத்துவம், நியாயத்தன்மை

  • உலகத்தை மிகவும் சிறந்த இடமாக மாற்றுவது எவ்வாறு என சிந்திப்பதற்கு எமக்கு உதவி வழங்குவது இலட்சிய நோக்கங்களாகும். 

        உதாரணம் :- சமூகம் சமத்துவத்தை மதிப்பளிக்கப்பட வேண்டும்

  • அரசியல் ஜனநாயக வழிமுறைக்குட்பட வேண்டும்
  • அரசியல் தத்துவவியலில் இலட்சிய எண்ணக்கருக்கள் சற்று உயர் மட்டத்திலான இரு அர்த்தங்களை வழங்குவதற்காக பயன்படுத்தப்படுகின்றது.

1.   அரசியல் சிந்தனைகள், ஆய்வு மற்றும் விபரிப்பு போன்றே அரசியல் நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகள் சமூகத்தின் பொது எதிர்ப்பார்ப்புகள்,  நல்வாழ்வுக்காக பாடுபட வேண்டும்.

2.   அரசியல் தோற்றப்பாடுகள் என்றால் என்ன? என்பதை மாத்திரம் விளங்கப்படுத்துவது அல்லாமல,; அரசியல் நிறுவனஙக்ள் மற்றும் நடைமுறைகள் எவ்வாறு அமையவேண்டும் என்பதை முன்வைத்தலே அரசியல் ஆய்வின் நோக்காக அமைய வேண்டும்.

இதுவரை எல்லா அரசியல் தத்துவவியலாளர்களினதும் சிந்தனையாக மேற்குறிப்பிட்ட இரு நோகக்ஙக்ளை அடிப்படையாக கொண்டே காணப்பட்டன.




தத்துவவியல்/இலட்சியவாத அணுகுமுறையின் பிரதான பண்புகள்

1.   இங்கு பயன்படுத்தப்படும் எண்ணக்கருக்களின் விளக்கங்களை ஆழமாக ஆய்வு செய்தல்.

2.   அரசியல் உலகு தொடர்பாக காணப்படும் பிரதான முரண்பாடுகளை வெளிப்படுத்தி அவற்றினை விவாதிப்பது

3.   அரசியல் சிந்தனை கட்டமைப்பின் நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகளை இலட்சிய பண்புகள் மற்றும் தியாகம் தொடர்பில் ஈடுபாடு காட்டல்.

Click here to Watch lecture

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இடவிளக்கப்படங்களில் பௌதிக பண்பாட்டமச்ங்கள்

அரசியலின் அறிமுகம், அரசியலாய்வு மற்றும் அணுமுறைகள்