பல்தேர்வு வினாக்கள்(MCQ) செய்வதற்கான இலகு வழி முறைகள்
கலைப்பிரிவில் உயர் தரத்தில் புவியியல் மற்றும் அரசியல் விஞ்ஞானப் பாடங்களில் உயர்தர பரிட்சை எழுதும் மாணவர்களுக்கான சில தந்திரோபாய திட்டங்கள் பற்றிய விளக்கம் பின்வருமாறு தரப்பட்டுள்ளன. அவற்றில் பிரதானமாக ஆறு வழிமுறைகளை இங்கு அவதானிப்போம்.
- இரு பாடங்களுக்குமான வினாத்தாள் பற்றிய பூரணமான விளக்கம் ஒன்று தேவைப்படுவதால் மாணவர்கள் அவசியம் வினாத்தாள் பற்றிய கட்டமைப்பு தெரிந்திருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் எதனைப் படிக்க வேண்டும், எவ்வாறு படிக்க வேண்டும், எவ்வகையான கேள்விகள் பரிட்சையில் கேட்கக் கூடும், அதற்கு எவ்வாறான சிறப்புமிகு விடைகளை எழுத முடியும் முதலான தெளிவினை பெற்றுக்கொள்ளமுடியும்.
- அடுத்ததாக ஒவ்வொரு பாடம் தொடர்பான பல்தேர்வு வினாக்கள் தொகுத்தல் வேண்டும். இதற்காக கடந்தகால பரீட்சை வினாத்தாள், தவணை பரீட்சை மற்றும் மாதிரி பரீட்சை முதலான பரீட்சைகளின் வினாத்தாள்களை வைத்து ஒப்பிடுவது, மேலும் ஒவ்வொரு பாடம் சம்பந்தப்பட்ட வினாக்களை அப் பாடங்களுக்கு ஏற்ப வகைப்படுத்தல் வேண்டும். இன்னும் பல்தேர்வு வினாக்கள் சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாங்கியும் இப்பயிற்சிகளை அதிக அதிகமாக மேற்கொள்ளலாம்.
- உயர்தர கலைத்துறையில் புவியியல் மற்றும் அரசறிவியல் ஆகிய பாடங்கள் அண்மைக்கால விடயங்களோடு மிகவும் தொடர்புபட்ட பாடங்களாக விளங்குகின்றன. அவ்வகையில் ஒவ்வொரு மாணவர்களும் அக்கற்கைத்துறை தொடர்பாக அதிக தேடல்களை தேட வேண்டும். அதற்காக சமூக வலைத்தளங்கள், இணையம், பத்திரிகைகள் மற்றும் பாடங்கள் தொடர்பான புத்தகங்களின் ஊடாக பரந்துபட்ட அறிவினை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் உலகம் பற்றிய பொதுவான தேடல்கள் இவ்விரு பாடங்களின் பல்தேர்வு கூற்றுக்கள் உடன் தொடர்ப்படுவதனால் இவ்வழிமுறையும் உங்களுக்கு நன்மைபயக்கும்.
- அடுத்த வழிமுறையாக இவ்விரு பாடங்கள் தொடர்பான வினாக்களை பகுப்பாய்வுரீதியாக ஆராய வேண்டும். அதாவது எவ்வகையான வினாக்கள் அதிகமாக கடந்தகால பரீட்சைகளில் கேட்கப்பட்டுள்ளது. அவ்வாறு கேட்க படுவதற்கு அக்காலங்களில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள் மற்றும் அக்கால நடைமுறைகள் எவ்வாறு பொருந்துகின்றது முதலான பொருத்தப்பாடுகளுடன் வினாக்கள் பற்றிய ஆய்வுகள் அமைய வேண்டும். இதனூடாக இவ்வருட தொடர்புகள் எவ்வாறு வினாக்களில் தொடுக்கப்படலாம் என்பதனை விளங்கிக் கொள்ளலாம்.
- நேர முகாமைத்துவம் என்பது மிகவும் முக்கியமான ஒரு வழிமுறையாகும். அதிக மாணவர்களால் கவனத்தில் கொள்ளப்படாத மற்றும் அலட்சியமாக இருக்கும் ஒரு விடயம் நேர முகாமைத்துவம் ஆகும். ஆரம்ப காலத்திலிருந்தே நேர முகாமைத்துவம் தொடர்பாக அதிக அக்கறை செலுத்த வேண்டும். இதற்காக எழுதி பழகுதல் வேண்டும். இலங்கையின் கல்வி கொள்கைக்கேற்ப பரிட்சைகள் என்பது ஆவணப்படுத்தல் சார்ந்த ஒரு முறையாகும். ஆகவே கற்ற விடயங்களை சரியான முறையில் குறித்த நேரத்திற்குள் எழுத முயற்சிக்க வேண்டும். இதனூடாக சிறந்த பெறுபேற்றினை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறான வழிமுறைகளை வீடியோ வடிவில் பார்ப்பதற்கு இவ் வீடியோவினை கிளிக் செய்யவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக