கலைத்துறையில் உயர்தர மாணவர்களால் எவ்வாறு பாடங்கள் தெரிவு செய்தல் வேண்டும்
மாணவர்களுக்கு பிரதானமாக நான்கு துறைகளில் / வகைபாடுகளின் படி பாடங்களை தெரிவு செய்யலாம்.
1 - சமூக விஞ்ஞானப்பாடங்கள்
(பொருளியல், புவியியல், அரசியல் விஞ்ஞானம், வரலாறு, மனைப் பொருளியல், தொடர்பாடலும் ஊடக கற்கை)
இவற்றில் 3 பாடங்கள்/2 பாடங்கள்/ ஒரு பாடத்தை தெரிவு செய்யலாம்.
அதிக வெட்டுப்புள்ளிகளை கொண்ட பாடங்களாக இவை காணப்படுகின்றமை இங்கு அவதானிக்கத்தக்கது.
2 - சமயங்கள்/நாகரீகங்கள்
(பௌத்தம், இந்து,கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம்)
(பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய நாகரீகங்கள்)
நாகரீகங்களை கொண்ட பாடங்கள் அதிக வெட்டுப்புள்ளிகளைக் கொண்ட பாடங்களாகும்.
ஒரு சமய பாடத்தை தெரிவு செய்தால் அதே சமய பாடத்தின் நாகரீக பாடத்தை தெரிவு செய்ய முடியாது.
உ+ம் - பௌத்த சமயம் + பௌத்த நாகரீகம்
3 - அழகியட்கலை பாடங்கள்
நடனம் - சிங்களம், பரதம்
சங்கீதம் - கீழையத்தேய,கர்நாடக,மேலையத்தேய சங்கீதங்கள்.
அரங்கியல் - சிங்களம், தமிழ், ஆங்கிலம்
இவ்வகைப்பாடில் ஆகக்கூடியதாக இரு பாடங்களையே தெரிவு செய்தல் வேண்டும்.
4 - மொழிகள்
தேசிய மொழிகள்
1) சிங்களம்
2) தமிழ்
3) ஆங்கிலம்
சாஸ்திரிய மொழிகள்
அரபு
பாலி
சமஸ்கிரதம்
வெளிநாட்டு மொழிகள்
சீனா மொழி, பிரெஞ்சு, ஜெர்மானிய, ஜப்பான், மலாய், ரஷ்யன் முதலான மொழிகள்.
இங்கு பாடங்களை தெரிவு செய்வதில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் வருமாறு.
இலகுவாக பல்கலைக்கழக நுழைவை தீர்மானிக்கும் பாடங்கள்
உ+ம் - புவியியல், அரசியல் விஞ்ஞானம்,பொருளியல்
அதிக z-core கொண்ட பாடங்களை தெரிவு செய்தல்.
உ+ம் - சமூக விஞ்ஞான பாடங்கள், நாகரீக பாடங்கள், மொழிப் பாடங்கள்
எதிர்கால தொழில் வாய்ப்பை கருத்தில் கொண்டு பாடங்களை தெரிவு செய்தல்.
ஒரு சட்டத்தரனியாக வருவதற்கு - கட்டாயமாக குறைந்தது ஒரு சமூக விஞ்ஞான பாடத்தை எடுத்திருக்க வேண்டும். அத்துடன் அழகியல் கற்கை பாடங்களை எடுக்காதிருக்க வேண்டும்.
அவ்வகையில் சிறந்த பாடங்களாக சட்டவியலோடு தொடர்பான பாடமான அரசறிவியல், புவியியல் மற்றும் தேசிய மொழிப் (தமிழ்) பாடமொன்றை தெரிவு செய்தல் நன்று.
நிர்வாக சேவையில் இணைய விரும்பினால் அல்லது அது போன்ற உயர் பதவிகளில் இணைய விரும்பினால் பொருளியல், புவியியல், அரசறிவியல் மற்றும் தமிழ் மொழி முதலான பாடங்களை தெரிவு செய்தல் சிறந்து.
பொருளியல், புவியியல், அரசறிவியல் - தர்க்கவியல், நுண்ணறிவு முதலானவற்றை வளர்ச்சியடையச் செய்வதோடு உளசார்பு பரீட்சைகளுக்கு உதவியாக இருக்கும்
தமிழ் மொழி - கிரகித்தல் தொடர்பான பாடங்களுக்கு உதவியாகயிருக்கும்.
பாடங்களை தெரிவு செய்யும் போது பாடசாலையின் ஆசிரியர் வளங்களையும் கருதிற் கொள்ளல் சிறந்தது. ஆனால் இன்று தனியார் வகுப்புக்களின் மூலமும் , Online Classes மூலமும் அப்பாடங்களை பயிலக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. Zoom Meet App மூலம் வீட்டில் இருந்தவாறே பயண சிரமங்கள் இல்லாமல் உங்களுக்கு விரும்பிய நேரத்தில் பாடங்களை பயிலக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
இலங்கையில் கலைத்துறையில் முதலாம், இரண்டாம் இடங்களையும், மாவட்ட அடிப்படையில் முதலாம், இரண்டாம் நிலைகளை பெறவும், Z-Core 2.0 மேற்பட்ட வெட்டுப்புள்ளிகளை பெறுவதற்கும் நீங்கள் சிறந்த பாடத்தெரிவை மேற் கொள்ளவேண்டும்.
*புவியியல்*
*அரசறிவியல்*
*தமிழ் மொழி/நாகரீக பாடங்கள்*
மேற்கூறிய விடயங்களுக்கு சாதகமாகவும், எங்கும் ஆசிரியர் வளங்கள் காணப்படும் பாடங்களாகவும் அவதானிக்க முடிகின்றன.
கருத்துகள்
கருத்துரையிடுக