கலைத்துறையில் உயர்தர மாணவர்களால் எவ்வாறு பாடங்கள் தெரிவு செய்தல் வேண்டும்
மாணவர்களுக்கு பிரதானமாக நான்கு துறைகளில் / வகைபாடுகளின் படி பாடங்களை தெரிவு செய்யலாம். 1 - சமூக விஞ்ஞானப்பாடங்கள் (பொருளியல், புவியியல், அரசியல் விஞ்ஞானம், வரலாறு, மனைப் பொருளியல், தொடர்பாடலும் ஊடக கற்கை) இவற்றில் 3 பாடங்கள்/2 பாடங்கள்/ ஒரு பாடத்தை தெரிவு செய்யலாம். அதிக வெட்டுப்புள்ளிகளை கொண்ட பாடங்களாக இவை காணப்படுகின்றமை இங்கு அவதானிக்கத்தக்கது. 2 - சமயங்கள்/நாகரீகங்கள் (பௌத்தம், இந்து,கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம்) (பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய நாகரீகங்கள்) நாகரீகங்களை கொண்ட பாடங்கள் அதிக வெட்டுப்புள்ளிகளைக் கொண்ட பாடங்களாகும். ஒரு சமய பாடத்தை தெரிவு செய்தால் அதே சமய பாடத்தின் நாகரீக பாடத்தை தெரிவு செய்ய முடியாது. உ+ம் - பௌத்த சமயம் + பௌத்த நாகரீகம் 3 - அழகியட்கலை பாடங்கள் நடனம் - சிங்களம், பரதம் சங்கீதம் - கீழையத்தேய,கர்நாடக,மேலையத்தேய சங்கீதங்கள். அரங்கியல் - சிங்களம், தமிழ், ஆங்கிலம் இவ்வகைப்பாடில் ஆகக்கூடியதாக இரு பாடங்களையே தெரிவு செய்தல் வேண்டும். 4 - மொழிகள் தேசிய மொழிகள் 1) சிங்களம் 2) தமிழ் 3) ஆங்கிலம் சாஸ்திரிய மொழிகள் அரபு பாலி சமஸ்கிரதம் வெளிநாட்டு மொழிகள் சீன