How to Make Money Online From Home in Tamil
ஒரு Blog உருவாக்குதல்
ஒரு Blog தொடங்குவதன் ஊடாக இன்று பல நாடுகளில் அதிகமான மக்கள் ஒன்லைன் ஊடாக அதிக வருமானத்தை ஈட்டும் ஒரு தொழிலாக காணப்படுகின்றது. இது இலங்கையிலும் பல பேரால் இன்று செய்யப்படும் ஒரு தொழிலாக மாறியுள்ளது. அன்றாட வாழ்க்கையில் நாம் செய்யும் தொழில்கள் மூலம் அல்லது வியாபார நடவடிக்கைகள் மூலம் எனக்கு வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும் அதுபோன்றே ஒன்லைனிலும் வருமானத்தை ஈட்டித்தரும் பலவகையான தொழில்கள் காணப்படுகின்றன.
அதில் முக்கியமான ஒரு ஆன்லைன் தொழிலாக இந்த Blog உருவாக்கம் மூலம் சிறந்த வருமானத்தை ஈட்ட முடியும். இது இலகுவானது மற்றும் எவ்வித ஆரம்ப மூலதனமும் இல்லாமல் ஆரம்பத்தில் கடும் உழைப்புடன் ஆரம்பித்து அதன்பின் தொடர்ந்து வருமானத்தை பெற்றுத்தரும் ஒரு இலகு வழிமுறையாகும். இதற்காக இதுபற்றிய விளக்கங்கள் மற்றும் தெளிவுகள் ஏராளமாக இணையதளத்தில் காணப்படுகின்றன.
இங்கு ப்லோக்கர் பற்றி சுருக்கமாக அவதானிப்போம். ஆரம்பத்தில் ப்லோக்கர் உருவாக்க வேண்டுமெனில் இணையதளத்தின் ஊடாக அது சார்ந்த விளக்கங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் அதன் பின்னர் எமக்கான ஒரு வலைத்தளத்தை உருவாக்க வேண்டும் இதனை எந்த முதலீடும் இன்றி கூகுள் ப்லோகர் சேவை ஊடாக பெற்றுக்கொள்ளமுடியும். சிறந்த எழுத்தாற்றலும் ஆங்கில அறிவும் ஏதாவது திறன்களை வைத்து மக்களை கவரும் வண்ணம் பதிவுகளை கவர்ச்சிகரமாக இடவேண்டும். அதாவது விளையாட்டுத்துறை, கல்வி சார்ந்த துறை, தொழில் வாய்ப்புத் துறை, சினிமா, தகவல் பரிமாற்றம், விஞ்ஞான உலகம், அரசியல் முதலான தலைப்புகளின் ஊடாக இதனை சிறந்த முறையில் நடத்திச் செல்லலாம். அதுவும் இளைஞர் யுவதிகளுக்கு இன்று இணையம் ஊடாக அதிக தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும்.
அந்த வகையில் சமையல் சார்ந்த பொழுதுபோக்குகளையும், கலை சார்ந்த விடயங்களையும் எழுதலாம். இவற்றை படிப்பதற்காகவும், அறிவாந்த தகவல்களை பெற்றுக் கொள்வதற்காகவும் ஏராளமான வாசகர்கள் இருக்கின்றார்கள் அல்லது தேடிக்கொண்டு இருக்கிறார்கள் எனலாம். அவர்களை கவரும் வண்ணம் புதிய சிந்தனைகள் அல்லது கருத்துக்களை வழங்க முடியும். மேலும் Blog உருவாக்கம் பற்றிய தெளிவுகளை யூட்யூபில் இலகுவாக தமிழ் மொழி மூலம் கற்றுக் கொள்ளலாம். அத்துடன் எவ்வாறான விடயங்களை வாசகர்கள் அதியமாக தேடுகின்றார்கள் என்பதை Google Trends ஊடாக அது சார்ந்த தரவுகளை உலகம், இலங்கை என்றவகையில் பகுப்பாய்வு செய்து கொண்டு அதிக வாசகர்கள் தேடும் விடயங்களினூடாக blog எழுதலாம்.
YouTube Channel உருவாக்கம்
இன்று அதிகமானோரை கவர்ந்த ஒரு தளமாகவும் கிராமப்புறங்களை சென்றடைந்துள்ள ஒரு தளமாக யூடியுப் தளம் காணப்படுகின்றது. இத்தளத்தின் ஊடாக பல்வேறுபட்ட விடயங்களை பல்வேறுபட்ட கோணங்களில் அறிந்துகொள்ள முடியுமாகின்றது. அத்துடன் உலகில் ஏராளமான நாடுகளின் ஒரு பிரதான தொழில் தளமாக யூட்யூப் தளத்தினை அவதானிக்க முடிகின்றது. அவ்வகையில் பல்வேறுபட்ட நாட்டு மாணவர்களால் மற்றும் இளைஞர் யுவதிகளால் முழுநேர அல்லது பகுதிநேர தொழில்களாக செய்யப்படுகின்றன. அதற்கு நீங்கள் யூடியூப் சேனல் பற்றிய தெளிவுகளை மற்றும் விளக்கங்களை இணையதளத்தின் ஊடாகவும், யூடியூப் சேனல்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும். ஒரு கையடக்கத் தொலைபேசியின் மூலம் ஒரு யூடியூப் சேனலை தொடங்க முடியும். கல்விக்காக, சமையலுக்காக, விளையாட்டுக்காக, பொழுதுபோக்கு விடயங்களுக்காக, தொழில்நுட்ப விடயங்களுக்காக, சமூக வலைதளங்கள் பற்றிய தேடல்கள் மற்றும் விளக்கங்கள் கொடுப்பதற்காக, உலகத்தின் அபூர்வமான விடயங்கள் மற்றும் சுற்றுலா கவரக்கூடிய விடயங்களுக்காக, மரபுகளை பழக்கவழக்கங்களை பிரமிக்கும் வண்ணமாக இன்று பலவகையில் பல பேரால் பல நாடுகளில் பலவகையில் பலவிதமான யூடியூப் சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளது. இவற்றுள் உங்களுடைய தனித்துவமான கருத்துக்களையும் ஆக்கங்களையும் திறமைகளையும் வெளிக்காட்ட கூடியதுமான ஒரு தளமாகவும் உங்களுக்கு மாற்றிக்கொள்ளலாம் அத்துடன் ஒரு தொழிலாகவும் செய்ய முடியும்.
Facebook Page உருவாக்கம்
நாம் இன்று சமூக வலைத்தளங்களை அதிகமதிகமாக பயன்படுத்துகின்றோம் அவற்றில் முகப் புத்தகமும் ஒன்றாகும். இலங்கையில் 96 சதவீத மக்கள் முகப்புத்தகத்தை பயன்படுத்துவதாக தரவுகள குறிப்பிடுகின்றன. அதில் கிட்டத்தட்ட 18 வயதிற்கும் 30 வயதிற்கும் உட்பட்டவர்களே அதிகமாக பயன்படுத்துகின்றார்கள். மேலும் இதனை ஒரு பொழுதுபோக்காகவும் அடுத்தவர்களுடன் கலந்துரையாடுவதற்காகவும் அத்துடன் நேரத்தை வீணாக கழிப்பதற்காகவும் அதிகமானோர் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் வேறு நாடுகளில் இதனை கொண்டு பலபேர் வருமானம் வரும் ஒரு துறையாக இன்று பயன்படுத்துகின்றார்கள். அந்த வகையில் பல தலைப்புகளின் கீழ் மக்களை கவரும் வண்ணம், வயது பிரிவினரை கவரும் வண்ணம், புதிய விடயங்களின் ஊடாக முகப்புத்தகத்தில் ஒரு FB Page தொடங்கி பணம் சம்பாதிக்கலாம். இது பற்றிய பூரணமான தெளிவுகள் எனது யூடியூப் சேனலில் (AGY ACADEMY) வரும் காலங்களில் பதிவிடப்படும்.
www.fiverr.com
இன்று இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் பிரசித்தி பெற்ற ஒன்லைன் தொழில் ஒன்றாக இருப்பது இந்த கiஎநசச இணையம் ஆகும். இதில் கிட்டத்தட்ட 10,000 மேற்பட்ட தொழில் வாய்ப்புகள் காணப்படுகின்றன. அவ்வாறான தொழில்களாக கம்ப்யூட்டர் சார்ந்த கிராபிக் டிசைனிங், போட்டோ எடிட்டிங், வெப்சைட் உருவாக்கம் மற்றும் அபிவிருத்தி செய்தல், மென்பொருட்களை உருவாக்கல், கார்ட்டூன் வரைதல், பவர்பாயிண்ட் உருவாக்கம் முதலானவற்றைக் குறிப்பிடலாம்.
Amazon program
மேற்குறிப்பிடப்பட்ட Blog, You Tube மற்றும் Fb Page போன்ற உருவாக்கி அதன் ஊடாக ஒரு விளம்பரம் காட்சி படுத்துவதன் மூலம் அதிலிருந்து ஒரு விற்பனை பங்கு கிடைக்கும். ஐக்கிய அமெரிக்காவின் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பல்தேசிய கம்பெனியாக யுஅயணழn நிறுவனம் காணப்படுகின்றது. இதனூடகவும் ஒன்லைன் ரீதியாக பணம் சம்பாதிக்க முடியும்.
ஒன்லின் சார்ந்த தொழில் வாய்ப்புக்கள் பற்றி இங்கு முழுமையாக தெளிவுகள் தர படாவிட்டாலும் அதுசார்ந்த சுருக்கமான தகவல்கள் தரப்பட்டுள்ளன. இவை சார்ந்த மேலதிக தகவல்களை ஐவெநசநெவஇ லுழர வுரடிந மூலமாக ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்களம் முதலான மொழிகள் ஊடாக பெற்றுக்கொள்ளலாம்.

Its really useful
பதிலளிநீக்கு